"இப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்" -ஜி .வி .பிரகாஷ் எந்த படத்தை பாராட்டினார் தெரியுமா ?
இசையமைப்பாளர் ஜி .வி .பிரகாஷ் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் .இவர் வசந்தபாலன் இயக்கத்தில் வெயில் படத்தில் ஹீரோவானார் .மேலும் இவர் பின்னணி பாடகரும் ஆவார்
இயக்குநர் சங்கரின் தமிழ்படமான ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தின் இவர் முதன்முதலில் ஒரு பாடகரானார். ரகுமானின் மற்ற படங்களிலும் இவர் பங்களித்துள்ளார். இவர் ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து அந்நியன், உன்னாலே உன்னாலே ஆகிய படங்களில் இரண்டு பாடல்களைப் பாடியுள்ளார்
மு.மாறன் எழுதி இயக்கியுள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரித்துள்ளார். இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி, சந்திரிகா ரவி, லிங்கா, முத்துக்குமார், ரமேஷ் திலக், ரெடின் கிங்ஸ்லி ஆகியோருடன் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார்.
சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். ஒரு பாடலுக்கு இமான் இசை அமைக்க, கார்த்திக் நேத்தா பாடல்கள் எழுதியுள்ளார். வரும் ஆகஸ்ட் 1ம் தேதி படம் திரைக்கு வருகிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் கூறுகையில், ‘மிகவும் இன்ட்ரஸ்டிங்கான ‘பிளாக்மெயில்’ கதையை மாறன் சொல்லும் போதே பிடித்துவிட்டது. அவர் திறமையான ஒரு இயக்குனர். அவரது குரு கே.வி.ஆனந்த் சார் மாதிரி சினிமாவில் ஒரு நல்ல இடத்துக்கு வருவார்.
இப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றிபெறும். அது எந்த படமாக இருந்தாலும் சரி, நல்ல கதைகள் மட்டுமே வெற்றிபெறும். இன்ஸ்டாகிராமில் தேஜு அஸ்வினியுடன் இணைந்து ஆடினேன். வைரலானது. அதனால்தான் இப்படத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார்’ என்றார்

