ஜி.வி.பிரகாஷ் இப்போது நடித்து வரும் படங்களின் பட்டியல்

gv prakash

தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது ‘இடிமுழக்கம்’, ‘13’, ‘அடங்காதே’, ‘மெண்டல் மனதில்’, ‘இம்மார்ட்டல்’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’, ‘4ஜி’, ‘காதலிக்க யாருமில்லை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ என்ற படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஒருவர் இயக்க உள்ள இப்படத்திற்கு ‘வேட்கை’ என பெயரிடப்பட்டுள்ளது. நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகும் அனைத்து படங்களும் சமூக கருத்துக்களையும், மக்களின் பிரச்னையை பேசும் படமாகவும் இருக்கும். அந்தவகையில் தற்போது ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்க உள்ள இந்த படம் எந்த மாதிரியான படம் என்பதில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Share this story