ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அடியே’. இந்த படத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக கௌரி கிஷன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வித்தியாசமான கதைக்களத்தில் காதல் மற்றும் ரொமான்ஸ் ஜோனரில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.