கோமாளியாக மாறிய ஜிவி பிரகாஷ்.. ‘அடியே’ ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு !
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘அடியே’. சயின்ஸ் பிக்ஷன் ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை 'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன.ர இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. படித்துவிட்டு வேலையில்லாமல் மன அழுத்தத்தில் இருக்கும் இளைஞனின் வாழ்க்கைதான் இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் - வெங்கட் பிரபு இணைந்து நடித்துள்ள அந்த காமெடி காட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.