தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை ரசிக்கலாம்- ஜிவி பிரகாஷ்

தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை ரசிக்கலாம்- ஜிவி பிரகாஷ் 

சியான் விக்ரம், பா. ரஞ்சித் முதல் முறையாக கூட்டணி அமைத்து தயாராகியுள்ள படம் ‘தங்கலான’. கேஜிஎப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். மிரட்டும் விதமாக விக்ரமின் தோற்றம் இந்த படத்தில் அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் கதை நகர்வதால் படத்திற்காக படக்குழு நிறைய மெனக்கெடல்களை செய்துள்ளனர். இந்த நிலையில் வரும் ஜனவரி 26ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பக நடந்து வருகிறது. 

தங்கலான் படத்தில் பழங்குடியினரின் இசை ரசிக்கலாம்- ஜிவி பிரகாஷ் 

இந்நிலையில், தங்கலான் படத்தின் பின்னணி இசைக்கு பழங்குடியினரின் இசைக்கருவிகளை பயன்படுத்தி இருப்பதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கூறியுள்ளார். 

Share this story