NEEK படத்தில் தனுஷுக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த செயல்...!

திரையுலகில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, எழுத்து என பல பரிணாமங்களை கொண்டவர் தனுஷ். இவர் ராயன் படத்தைத் தொடர்ந்து ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் இம்மாதம் 21- ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன.
படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .இந்தப் படத்தின் கதை இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் அருண் விஜய், எஸ்.ஜே சூர்யா, ஜி.வி பிரகாஷ் மற்றும் இயக்குனர்களான ராஜ்குமார் பெரியசாமி, விக்னேஷ் ராஜா, தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
— Amuthabharathi Videos (@videos45678) February 11, 2025
விழாவில் பேசிய ஜி.வி பிரகாஷ் " தனுஷ் சார் இயக்கும் திரைப்படத்தில் முதல்முறையாக வேலைப் பார்க்கிறேன். கண்டிப்பா ஒரு மேஜிக் ஏற்படும். நாங்கள் திரைப்படத்தை பார்த்துவிட்டோம். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும். படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரேயாஸ் சொன்னாரு இப்படத்தின் இசையமைப்புக்கு நான் சம்பளம் என எதுவும் வாங்கவில்லை என்று.
ஜெயிலர் திரைப்படம் ஹிட்டானதும் படக்குழுவை அழைத்து பரிசு வழங்கியதுப் போல் இப்படம் வெளியானதும் என்னை ஸ்பெஷலாக கவனிக்க வேண்டும்." என மிக நகைச்சுவையாக கூறினார்.