சம்பவம் இருக்கு.. ‘கேப்டன் மில்லர்’ குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ் !

captain miller

‘கேப்டன் மில்லர்’ குறித்து இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் முக்கிய அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். 

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’.  சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். 1930-ல் நடந்த மிகப்பெரிய கேங்ஸ்டர் கதைக்களத்தை கொண்ட படமாக இப்படம் உருவாகிறது.

captain miller

இந்த படத்தில் தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். இவர்களுடன் சிவ ராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நிவேதா சதீஷ், ஆங்கில நடிகர் எட்வர்ட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் நிறைவுபெற்றது. இதையடுத்து தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த மாதம் படத்தின் டீசர் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் ஜூலை 28-ஆம் தேதி முக்கிய அப்டேட் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஜூலை 28 சம்பவம் இருக்கு.. கில்லர் கில்லர் என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 


 


 

Share this story