'குட் பேட் அக்லி' அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்...!

gvprakash

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் 2வது பாடல் குறித்து  இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.  

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். ’குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் முதல் பாடலும் நல்ல வரவேற்பை பெற்றது. 


 இந்நிலையில், படம் வெளியிட்டிற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவிச்சில் நடைபெற்று வருவதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருந்தார். தற்போது 2வது பாடல் பல அற்புதமான பெயர்கள் மற்றும் காம்போக்களுடன் உருவாகி வருவதாக பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்

Share this story