ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் மிரட்டலான ஹாரர் திரில்லர் படம்,-என்ன டைட்டில் தெரியுமா ?

gv prakash

தமிழில் ‘டார்லிங்’ என்ற படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் மிரட்டலான ஹாரர் திரில்லர் படம், ‘13’. இருளுக்குள் மறைந்திருக்கும் மர்மத்தையும், மனித உயிரை பறிக்க காத்திருக்கும் சில அமானுஷ்ய சக்திகளையும் பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இதில் ஜி.வி.பிரகாஷ் குமார், கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். படம் குறித்து இயக்குனர் விவேக்.கே கூறுகையில், ‘சில உண்மை சம்பவங்களின் சாயலில், அடர்ந்த காட்டின் பின்னணியில் உருவாகியுள்ள படம் இது.

இருளுக்குள் மறைந்திருக்கும் ‘13’ என்ற எண்ணின் மர்மமும், சாத்தானின் பிடியில் சிக்கிய மனிதர்களின் போராட்டமும் திரையில் ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தை ஏற்படுத்தும். வரும் டிசம்பர் மாத இறுதியில், திரையரங்குகளில் ரசிகர்களை உறைய வைக்க காத்திருக்கிறோம்’ என்றார். பவ்யா ட்ரிக்கா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா, ஆத்யா பிரசாத் நடித்துள்ளனர். பாடல்களுக்கு சித்து குமார் இசை அமைக்க, ஏஜே பின்னணி இசை அமைத்துள்ளார். சி.எம்.மூவேந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஜே.எப்.காஸ்ட்ரோ படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார். நாஞ்சில் பி.எஸ்.ராபர்ட் அரங்கம் அமைத்துள்ளார். தினேஷ் காசி, ராம்குமார் இணைந்து சண்டைப் பயிற்சி அளித்துள்ளனர்.

Share this story