விறுவிறுப்பாக படமாகும் ‘காதலிக்க நேரமில்லை’... ஜிவி பிரகாஷ் பட அப்டேட்

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள உருவாகி வரும் திரைப்படம் 'காதலிக்க யாருமில்லை'. இந்த படத்தில் கதாநாயகியாக பிக்பாஸ் பிரபலம் ரைசா வில்சன் நடித்துள்ளார். இந்த படத்தில் குரு சோமசுந்தரம், யோகிபாபு, கெளசல்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்த படத்தை கமல் பிரகாஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் இந்த படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்படும் படப்பிடிப்பின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் முக்கிய அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.