அழகான காதல் பேசும் 'அடி கட்டழகு கருவாச்சி'.... 'கள்வன்' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் !

kalvan

ஜிவி பிரகாஷின் 'கள்வன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. 

 பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘கள்வன்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இவானா கதாநாயகியாக நடித்து வருகிறார். 

kalvan

பேச்சிலர் படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்து வருகிறது. இந்த படம் காட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது. அதனால் சத்யமங்கலம் புலிகள் காப்பக பகுதியான கடம்பூர் மலை கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

kalvan

தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் அடி கட்டழகு கருப்பாயி என்ற அழகாக பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Share this story