ஜி.வி. பிரகாஷ் - கயாடு லோஹர் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு..!

gvp

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் -கயாடு லோஹர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்  ஜி.வி.பிரகாஷ். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ், மு.மாறன் இயக்கத்தில் ‘Blackmail’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஜிவி பிரகாஷ் நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் புதிய படத்தில் நடிக்க உள்ளார்.


இந்த படத்தினை ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிகை காயடு லோஹர் நடப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்க் லுக் டைட்டில் வெளியாகி  உள்ளது. இப்படத்திற்கு immortal என பெயர் வைக்கப்பட்டுள்ளது.   ஃபர்ஸ்க் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். 

Share this story