குறட்டை விடும் ஐஸ்வர்யா ராஜேஷ்... சமாளிக்க முடியாமல் தவிக்கும் ஜிவி பிரகாஷ்.. ‘டியர்’ ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

DeAr

ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் ‘டியர்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

 ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்முறையாக இணைந்து புதிய படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், பிளாக் ஷீப் நந்தினி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

DeAr

ஜிவி பிரகாஷே இசையமைக்கும் இந்த படத்திற்கு ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகும் இந்த படத்தை நெட்மக்ஸ் பிரொக்‌ஷன்ஸ் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி, பிரத்விராஜ் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘டியர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படம் குறட்டை கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் குறட்டை விட அதை சமாளிக்க முடியாமல் ஜிவி பிரகாஷ்குமார் இருப்பது போன்று இருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே ‘ஜெய் பீம்’ படத்தின் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குட் நைட்’ திரைப்படம் வரும் மே 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படமும் குறட்டை கதைக்களத்தை கொண்டு உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story