இசை படைப்புகளுக்கு சேவை வரியா ?... அதிர்ச்சியில் ஜிவி பிரகாஷ்.. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு !

gv prakash

ஜிவி பிரகாஷ் இசை படைப்புகளுக்கு சேவை வரி விதித்த வரித்துறைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். அவர் திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமல்லாமல் இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தனது இசை படைப்புகளுக்கு சேவை வரி செலுத்தவில்லை என கூறி வருமான வரித்துறை சார்பில் ஜிவி பிரகாஷூக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 84 லட்சம் வரி செலுத்தவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. 

gv prakash

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் ஜி.எஸ்.டி இணை ஆணையருக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி ஜிவி பிரகாஷூக்கு உத்தரவிட்டார். 

நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஜிவி பிரகாஷ் மேல் முறையீடு செய்தார்.  அதில் இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள் தான். அதனால் தன்னிடம் வரி வசூலிப்பது சட்ட விரோதம் என்று கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நான்கு வாரங்களில் வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டார். 

 

 

Share this story