அமானுஷ்ய காட்சிகள் இடம்பெற்றுள்ள ஜி.வி.பிரகாஷ் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?

karthi with gv
ஜி.வி.பிரகாஷ் குமார், கயாடு லோஹர் நடித்துள்ள ‘இம்மார்ட்டல்’ என்ற படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ‘கிங்ஸ்டன்’ என்ற படத்துக்கு பிறகு ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தை மாரியப்பன் சின்னா இயக்க, அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ளார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. இப்படத்தின் டீசரில் காதல் மற்றும் அமானுஷ்ய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இறுதியில் வருவது ஏலியனா அல்லது வேறு ஏதாவது மிருகமா என்பது பற்றி விளக்கம் அளிக்கப்படவில்லை. சயின்ஸ் ஃபிக்‌ஷன் கதையுடன் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.

Share this story