மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில் தங்கலான் பாடலை பாடிய ஜிவி பிரகாஷ்
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் ,மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோர் நடிப்பில் தயாராகியுள்ள படம் தங்கலான். கே.ஜி.எப்-ஐ மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் லுக் போஸ்டர், டைட்டில் ஆகியவை வெளியாகி படத்தின் மீதான் எதிர்பார்பை அதிகரித்தது. அதற்கு காரணம் படத்தில் சியான் விக்ரமின் தோற்றம். இதுவரை நாம் பார்த்திராத வகையில் அடையாளம் தெரியாத விதமாக செம லுக்கில் உள்ளார் விக்ரம். அதிரடி சண்டை காட்சிகள், ரத்தம் தெரிக்கும் போர் காட்சிகள் என மிரட்டும் விதமாக படத்தின் டீசர் அமைந்தது.
#Thangalaan song offically leaked by GVPrakash 😀
— AmuthaBharathi (@CinemaWithAB) December 31, 2023
Meanwhile that song...seems he tried something different like Aayirathil Oruvan 👌🎶pic.twitter.com/nO8hrGCIgA
இத்திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 26-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னையில் நடந்த மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியில், இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தங்கலான் படத்தின் டைட்டில் பாடலை பாடி அசத்தியுள்ளார்.