ஜி.வி பிரகாஷ் நடித்த `அடங்காதே' படத்தின் ரிலீஸ் அறிவிப்பு...!

gvp

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள `அடங்காதே' படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது. 

அறிமுக இயக்குனர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், சுரபி, சரத்குமார், மந்திரா பேடி, தம்பி ராமையா மற்றும் யோகி பாபு ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'அடங்காதே'. இப்படம் கடந்த 2018ம் ஆண்டில் திரைக்கு வரவிருந்தது. இந்த படத்திற்கு தணிக்கை குழுவில் பல கட் தந்தனர். இதனால் இத்திரைப்படம் பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டது.gvp

இந்த நிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பின்னர் அடங்காதே படம் ஜூன் மாதத்தில் திரைக்கு வருகிறது என படக்குழு திடீரென அறிவித்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் சண்முகம் முத்துசாமி இதற்கிடையில் 'டீசல்' எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story