ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகும் சயின்ஸ் பிக்ஷன் படம்.... ‘அடியே’ வித்தியாசமான மோஷன் போஸ்டர் வெளியீடு !

Adiyae

 ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகும் ‘அடியே’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

Adiyae

பிரபல இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அடியே’. இந்த படத்தை 'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இப்படத்தை இயக்கி வருகிறார். '96' பட்டத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை கெளரி கிஷன் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Adiyae

இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு இப்படம் உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் படத்திலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை வரும் ஜூன் மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Adiyae

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வித்தியாசமான மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் சீமான் இலங்கை பிரதமராக இருப்பது போன்று பிரேக் நியூசும், விஜய் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாக இருந்த ‘யோகன்’ படம் 150 நாட்களை கடந்தததை போன்றும், நடிகர் அஜித் பார்முலா பந்தயத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டு மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த மோஷன் போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது.  

Adiyae

Share this story