விபத்தால் தலைகீழாக மாறிய ஜிவி பிரகாஷின் வாழ்க்கை.. ‘அடியே’ டிரெய்லரை வெளியிட்ட தனுஷ் !

Adiyae

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடியே’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

ஜிவி பிரகாஷ் மற்றும் கௌரி கிஷன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘அடியே’. வித்தியாசமான கதைக்களத்தில் காதல் மற்றும் ரொமான்ஸ் ஜோனரில் உருவாகியுள்ள இந்த படத்தை 'திட்டம் இரண்டு' படத்தை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கியுள்ளார்.

Adiyae

மேலும் இந்த படத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு, மதும்கேஷ், மிர்ச்சி விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளன.ர டைம் டிராவல் கதைக்களத்தை கொண்டு உருவாகி வரும் இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இந்த டிரெய்லரை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். படத்தின் ஹீரோவான ஜிவி பிரகாஜுக்கு திடீரென ஏற்பட்ட விபத்து காரணமாக அவருடைய வாழ்க்கையே தலைகீழாக மாறி வருகிறது. தான் இருக்கும் உலகமே வேறு என்று அவர் நினைக்கும் அளவுக்கு பல வித்தியாசமான சம்பவங்கள் நடக்கிறது. இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் இந்த படம். 

 

Share this story