ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் பிளாக் மெயில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்..

gvp

ஜி.வி. பிரகாஷ் நடித்துள்ள 'பிளாக் மெயில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 

இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் வெற்றிகரமாக பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் சமீப காலமாக நடிகராகவும் வளம் வருகிறார்.இசையமைப்பாளராக தமிழில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் சூர்யாவின் 45வது படம் என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ள நிலையில், ஒவ்வொரு படமாக ரிலீஸ் ஆகி வருகிறது. அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும் ஜி.வி இசையமைத்துள்ளார்.


இவர் சமீபத்தில் இசையமைத்த அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் இரண்டு படங்களிலும் பாடல் மிகப்பெரியளவில் ஹிட்டானது. இதனிடையே பிளாக் மெயில் என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளார். இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

Share this story

News Hub