அமரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்
1727245805000
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள திரைப்படம் அமரன். உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில்"முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு ராணுவ வீரராக நடித்திருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக அவர் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அமரன் திரைப்படம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் முடித்துள்ளார்.படத்தின் முதல் பாடலை குறித்து தற்பொழுது அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் முதல் பாடலான `ஹே மின்னலே' பாடல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது ஒரு காதல் பாடலாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
nullThe first single will be a love song from #Amaran …. Titled …. ✨Hey Minnale✨#HeyMinnale …. @Siva_Kartikeyan #saipallavi @RKFI … coming in few days …. @ikamalhaasan @Rajkumar_KP#Mahendran @gvprakash @anbariv @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin…
— G.V.Prakash Kumar (@gvprakash) September 24, 2024