ஜிவி பிரகாஷ் நடிக்கும் 25-வது திரைப்படம்... வெளியானது அறிவிப்பு..
1696857447780
இசையமைப்பாளர் ஆக ஜி.வி.பிரகாஷ் குமார் 100- வது திரைப்படத்தை விரைவில் எட்டயுள்ளார். அதேபோல், நடிகராக 25வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை கமல் பிரகாஷ் இயக்குகிறார். பேண்டஸி ஜானரில் உருவாகும் இந்த படத்தை ஜி.வி. பிரகாஷூடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பட்ஜெட்டில் இந்த திரைப்படம் உருவாக உள்ளது. தற்போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ள ஜிவி பிரகாஷ், படத்தின் முதல் தோற்றத்தை கமல்ஹாசன் வௌியிடுவார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர், நடிகைகள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.