GVP 100 : 'திரைப் பயணத்தில் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி' - ஜி.வி.பிரகாஷ்

GVP

சுதா கொங்கரா இயக்கும் எஸ்.கே.25 படம் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 100-வது படமாகும் .இசை மற்றும் நடிப்பு என இரண்டு துறையிலும் பயணிக்கும் ஜி.வி. பிரகாஷ் தற்போது நடிகராக தமிழில் இடிமுழக்கம், 13, கிங்ஸ்டன் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் இசையமைப்பாளராக நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், வணங்கான், வீர தீர சூரன், இட்லி கடை மற்றும் எஸ்.கே.25 என ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். அதோடு அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், இவர் இசையமைக்கும் 100-வது படம் எஸ்.கே.25 ஆகும். இப்படத்தை 'சூரரைப் போற்று' படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார்.


சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் தற்போது 100-வது படத்திற்கு இசையமைக்க உள்ளநிலையில், இந்த சாதனைப் பயணத்திற்கு வாய்ப்பளித்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Share this story