விஜய் படத்தை இயக்குவதை உறுதி செய்த எச்.வினோத்...! அரசியல் படமா? இல்லையா?
நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள அவரது கடைசி படம் அரசியல் படமா? இல்லையா? என்பது குறித்து இயக்குனர் எச்.வினோத் பதில் அளித்துள்ளார்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். உச்சநட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கிய பிறகு அவர் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பதாக அறிவிப்பை வௌியிட்டார். அவரது நடிப்பில் அவருடைய 68வது படமான தி கோட் படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இதையடுத்து, அவருடைய கடைசி படமாக தளபதி 69 உருவாக உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்க உள்ளார்.
இந்த நிலையில், எச். வினோத் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், அவர் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் குறித்து பேசியுள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார். இதனால், அது அரசியல் சார்ந்த படமாக இருக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
"#Thalapathy69 will be 200% ThalapathyVijay film with commercial elements. All age people & political parties will be watching this film, so it will have light elements without offending any politicians"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 16, 2024
- HVinoth pic.twitter.com/BBXNy5ERWJ
அதற்கு பதிலளித்து பேசிய எச்.வினோத், இல்லை. இது 200 சதவீதம் தளபதி படம். பக்கா கமர்ஷியல் படம். இந்த படத்தை அனைத்து வயதினரும் பார்க்கும் படமாக இருக்கும். அனைத்து கட்சியினரும் பார்க்கும் படம். எல்லாரும் பார்க்கும் படமாக இருக்கும். ஒரு அரசியல் கட்சியையோ, அரசியல்வாதியையோ தாக்கும் படமாகவோ இல்லாமல் அனைவரும் பார்க்கும் படமாக இருக்கும் என்று கூறினார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.