நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள படம், ‘ஹாய்’-எப்போது ரிலீஸ் தெரியுமா ?

kavin

முதல்முறையாக நயன்தாரா, கவின் இணைந்து நடித்துள்ள படம், ‘ஹாய்’. இயக்குனர் ேலாகேஷ் கனகராஜின் உதவியாளர் விஷ்ணு எடவன் எழுதி இயக்கியுள்ளார். முக்கிய வேடங்களில் கே.பாக்யராஜ், பிரபு, ராதிகா, விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசை அமைத்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்ய, எஸ்.கண்ணன் அரங்கம் அமைத்துள்ளார். ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இதை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ்.எஸ்.லலித் குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

வினோத் சி.ஜே., கே.எஸ்.மயில்வாகனன் இணை தயாரிப்பு செய்துள்ளனர். கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வி.கே.குபேந்திரன் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இப்படம் வரும் 28ம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படம் குறித்து விஷ்ணு எடவன் கூறுகையில், ‘எளிமையான, இனிமையான, மனதை வருடும் குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘ஹாய்’ உருவாகியுள்ளது. சென்னை, கோயம்புத்தூர், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘யாரடி நீ மோகினி’ போன்ற வில்லன்களே இல்லாத ஃபேமிலி எண்டர்டெயினர்களின் உணர்வை நினைவூட்டும் படமாக இது இருக்கும்’ என்றார்.


லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய வெற்றிப் படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விஷ்ணு எடவன் அறிமுகமாகும் படம் என்பதாலும் மற்றும் நயன்தாரா, கவின் இணையும் முதல் படம் என்பதாலும், ‘ஹாய்’ படம் ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this story