ஹன்சிகா போல அவர் சகோதரரும் மனைவியை விவாகரத்து செய்தார் .

Hansika Motwani
தென்னிந்திய படவுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஹன்சிகா மோத்வானி, புதுப்பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதும், ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொண்ட ஓரிரு படங்களில் நடித்தார். அதுவும் கைகொடுக்காத நிலையில், கடந்த 2022ல் மும்பை தொழிலதிபர் சோஹைல் கதுரியாவை திருமணம் செய்தார். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் இருந்த அவர், தனது 4 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் முடிவுக்கு கொண்டு வந்தார். இச்செய்தி அவரது ரசிகர்களை அதிர வைத்தது.
இந்த விவாகரத்து டென்ஷனில் இருந்து விடுபடுவதற்காகவும், மன அமைதிக்காகவும் ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள ஹன்சிகா மோத்வானி, தனது தாய் மற்றும் சகோதரரை அழைத்து சென்றுள்ளார். அந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அதை பார்த்த நெட்டிசன்கள், அந்த போட்டோக்களின் கீழ், ‘இனிமேல் உங்களுக்கு பிடித்தது போல் உங்கள் வாழ்க்கை மாறும். சந்தோஷமாக இருங்கள். தாயை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று பதிவிட்டுள்ளனர். முன்னதாக ஹன்சிகா மோத்வானியின் சகோதரர் பிரசாந்த் மோத்வானி, தனது 2 வருட திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்பட்டதால், மனைவியிடம் இருந்து கடந்த 2022ல் விவாகரத்து பெற்று பிரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story