மார்ச்சில் வெளியாகும் ஹன்சிகாவின் 'காந்தாரி' ... பொங்கலையொட்டி புதிய அறிவிப்பு !

gandhari

ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தாரி' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தென்னிந்தியாவில் உள்ள முன்னணி நடிகைகள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இருக்கும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகையான ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'காந்தாரி'. இந்த படத்தை தி 'கிரேட் இந்தியன் கிச்சன்', 'காசேதான் கடவுளடா' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கியுள்ளார். 

 gandhari

முதல்முறையாக இந்த படத்தில் நடிகை ஹன்சிகா இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர் முத்து கணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இந்த படம் எமோஷனல் மற்றும் ஹாரர் காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. தற்போது தயாரிப்பு பணியில் இருக்கும் இப்படத்தின் மிரட்டலான போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு பொங்கலையொட்டி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகிறது. 

Share this story