“அதிசயமே அசந்து போகும் நீ எந்தன் அதிசயம்” – ஹன்சிகாவின் லேட்டஸ் கிளிக்ஸ்.
1673348346901

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த நடிகை ஹன்சிகா. தற்போது தனது காதல கணவர் சோஹைல் கத்தூரியாவுடன் உலக அதிசயத்தில் ஒன்றான எகிப்தின் பிரம்மீடுகளை சுற்றி பார்த்து, ஜாலியாக ஒட்டக சவாரி செய்து, ரொமான்டிக் லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகளை பழமை வாய்ந்த முண்டோட்டா அரண்மனையில் மிக பிரம்மாண்டமாக ஹன்சிகா சோஹைல் கத்தூரியா திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு முதலில் ஜெர்மனி, பாரிஸ் ஆகிய நாடுகளுக்கு சென்று அங்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாடிய இந்த ஜோடி தற்போது எகிப்துக்கு சென்றுள்ளனர்.
அங்கு ஜாலி டிரிப் அடித்துள்ள இந்த ஜோடி விதவிதமாக புகைப்படம் எடுத்து அதனை தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகிறது.