அழைப்பிதழுக்கே இவ்வளவு செலவா! ”ஒரு கோடிப்பு” வேகமெடுக்கும் ஹன்சிகாவின் திருமண ஏற்பாடு.

photo

இந்தி டிவி நிகழ்ச்சிகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்ததேசமுருடுஎன்ற தெலுங்கு திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  தமிழில் மாப்பிள்ளை படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் காதல், விஜய்யுடன் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி, அரண்மனை,  ஆம்பளரோமியோ ஜூலியட், போகன் என பல படங்களில் நடித்துள்ளார்.

photo

ஹன்சிகா பார்ப்பதற்கு குஷ்பு போலவே கொழுக் மொழுக் என  இருந்ததால் ரசிகர்கள் அவரை குட்டி குஷ்பு என்று அன்போடு அழைப்பதுண்டு. தற்போது உடல் எடையைக் குறைத்து ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.

photo

இந்த நிலையில் ஹன்சிகாவிற்கும் தனது நீண்ட நாள் காதலரான  சோஹியல் கட்டுரியா என்பவரை  திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது, தொடார்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படமும் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. தற்பொழுது ஹன்சிகாவின் திருமண அழைப்பிதழ் வீடியோ கசிந்திருந்தது. அழைப்பிதழுக்காக அதிகம் செலவழித்து அதை போட்டோ ப்ரேம் போல உலோகத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.


 

இதன் மொத்த மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்றும் விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Share this story