என் மகன் போல இருந்தவனை இழந்து விட்டேன் - ஹன்சிகா மோத்வானி
1697779055498

நடிகை ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது பற்றி சமூக வலைதளத்தில் அவர் சோகத்துடன் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னனி நட்சத்திரங்களில் ஒருவர் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர், வேலாயுதம், வாலு, சிங்கம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் அண்மையில் தனது நண்பர் மற்றும் தொழிலபதிபரை திருமணம்செய்து கொண்டார். இந்த நிலையில், ஹன்சிகா சினிமாவில் நடிப்பதுடன் தொழிலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி செல்லமாக வளர்த்து வந்த புரூஸோ என்ற நாய் இறந்து போனது. இதுகுறித்து ஹன்சிகா தனது சமூகவலைதளப் பக்கத்தில், எனது மகன் போல் இருந்தாய்..உன்னை இழந்த வலியை வார்த்தைகளால் சொல்ல முடியாது என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.