ஹார்மோன் ஊசி போட்டேனா!....... வதந்திக்கு முற்று புள்ளி வைத்த ‘ஹன்சிகா மோத்வானி’.
குழந்தை நட்சத்திரமாக இருந்து இன்று முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிமா மோத்வானி. இந்தி சீரியல்களில் நடித்துவந்த ஹன்சிகா “ தேசமுதுரு” என்னும் தெலுங்கு படத்தின் மூலமாக வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். அதன் பின்னர் கோலிவுட் பக்கம் திரும்பினார். தனது முதல் படத்திலேயே தனுஷிற்கு ஜோடியாக ‘மாப்பிள்ளை’ படத்தில் நடித்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். தமிழ், தெலுங்கில் கதாநாயகியாக 50 படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில் தனது நீண்டநாள் நண்பரும், காதலருமான சோஹல் கத்தூரியா என்பவரை கடந்த டிசம்பர் மாதம் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணம் சில பல சர்சைகளை கிளப்பினாலும் கோலாகலமாக ஜெய்பூரில் நடந்தது. இந்த நிலையில் சிறுவயதில் இருக்கும்போது அவர் விரைவில் வளரவேண்டும் என்பதற்காக ஹன்சிகாவின் தாயார் அவருக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக வதந்திகள் பரவியது. இந்த வதந்திக்கு பதலளித்துள்ளார் ஹன்சிகா.
அதாவது “ சிறு வயதில் இருந்தே எனக்கு ஊசி என்றால் பயம், அதனால்தான் நான் டாட்டூ கூட போடவில்லை, அப்படி இருக்குபோது எனது தாய் எப்படி எனக்கு ஹார்மோன் ஊசி போடுவார், நான் எப்படி சம்மதிப்பேன், இந்த வதந்தி மூலமாக எனது வளர்ச்சி பலருக்கு பொறாமையாக இருப்பது நன்றாக தெரிகிறது ” என வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் ஹன்சிகா மோதவானி.