திருப்பதியில் நடிகை ஹன்சிகா சாமி தரிசனம்

Hansika motwani
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் ஹன்சிகா. கடந்த 2011 -ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார். சமீபத்தில், மை 3 என்ற வெப் தொடரிலும் நடித்து இருந்தார். சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை - 2 படத்தில் ஹன்சிகா நடித்திருந்தார். இந்தாண்டு கார்டியன் மற்றும் 105 மினிட்ஸ் என்ற படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோவிலுக்கு வெளியே வந்த அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

Share this story