முதலாமாண்டு திருமண நாளை கொண்டாடிய நடிகை 'ஹன்சிகா'!- கணவர் கொடுத்த விலைமதிக்க முடியாத பரிசு என்ன தெரியுமா?

photo

நடிகை ஹன்சிமா மோத்வானி- சோஹல் கதூரியா தம்பதி தங்களது முதலாமாண்டு திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

photo

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. ரசிகர்களால் குட்டி குஷ்பூ என அழைக்கப்படும் ஹன்சிகா கோலிவுட்டில் விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இவர் கடந்த அண்டு தனது நண்பரான சோஹல் கதூரியா  என்பவரை ஜெய்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

photo

இந்த நிலையில் ஹன்சிகா- சொஹைல் தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். திருமன நாள் பரிசாக ஹன்சிகாவின் கணவர் அவருக்கு தான் கைப்பட எழுதிய ஐந்து காதல் கடிதங்களை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்களை ஹன்சிகா தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  

Share this story