சைக்கோ த்ரில்லரில் மிரட்ட வரும் ஹன்சிகா... 'மேன்' ஃப்ர்ஸ்ட் லுக் வெளியீடு !

man

ஹன்சிகா நடிப்பில் உருவாகும் 'மேன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

 தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழியில் திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வரும் அவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

man

அந்த வகையில் ஹன்சிகாவை கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம் 'மேன்'. முழுக்க முழுக்க சைக்கோ த்ரில்லரில் உருவாகும் இந்தப் படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இதையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரமான லுக்கில் ஹன்சிகா இருக்கும் அந்த போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

man

இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு வில்லனாக பிக்பாஸ் பிரபலம் ஆரி அர்ஜூன் நடிக்கிறார். ஆர்யாவின் கலாபகாதலன், வந்தாமல ஆகிய படங்களை இயக்கிய இகோர் இந்த படத்தை இயக்குகிறார். ஹன்சிகாவின் 51வது படமாக உருவாகும் இந்த படத்தை மெட்ராஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share this story