ஓடிடியில் வெளியானது ஹன்சிகாவின் மை3 வெப் தொடர்

ஓடிடியில் வெளியானது ஹன்சிகாவின் மை3 வெப் தொடர்

சாந்தனு, ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடித்துள்ள மை3 வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிளை’ படமும் ரசிகர்களிடம் சேரவில்லை. இதையடுத்து, அவர் வெப் தொடர் ஒன்றை இயக்கியுள்ளார். இதற்கு மை3 என பெயரிடப்பட்டுள்ளது. இதில், ஹன்சிகா மோத்வானி, சாந்தனு, ஜனனி, முகேன் ராவ், உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரொமேன்டிக் காமெடி கதைக் களத்தில் இந்த தொடர் உருவாகியுள்ளது. மை3 வெப் தொடரின் முன்னோட்டம் அண்மையில் வெளியான நிலையில், தற்போது ஓடிடி தளத்தில் முழு வெப் தொடரும் வெளியாகி இருக்கிறது. 

Share this story