பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹீரோ... சிவகார்த்திகேயனுக்கு இயக்குனர் சுதா கொங்கரா வாழ்த்து..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25- வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்-க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக் வருகிறது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும். திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Happy bday hero !!! @Siva_Kartikeyan
— Sudha Kongara (@Sudha_Kongara) February 17, 2025
You are an absolute delight to work with cos finally it’s the journey and the company that makes one want to continue making cinema !💥 #Parasakthi pic.twitter.com/ZbCNkyKwNA
0
இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து பராசக்தி படக்குழு படத்தின் பிடிஎஸ் காட்சியை வெளியிட்டுள்ளது.