கருப்பு சட்டை அணிந்து மாஸாக ரஜினி படக்குழு தீபாவளி வாழ்த்து

rajinikanth

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நகர்ஜூனா சம்பந்தப்பட்ட காட்சி படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்தது. இது தொடர்பாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொண்டார். 


இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டது. மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு ரஜினி இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்த நிலையில் நாளை(31.10.2024) தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது படக்குழு. அதில் ரஜினி, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கருப்பு சட்டை மற்றும் வேட்டியில் உடை அணிந்திருக்கின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 

Share this story