ஜெய், ப்ரேம்ஜி இல்லாமல் சீனியர் நடிகர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி - வைபவ்

ஜெய், ப்ரேம்ஜி இல்லாமல் சீனியர் நடிகர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி - வைபவ் 

அறிமுக இயக்குநரான பார்.கே.விஜய் இயக்கத்தில், டாக்டர், அயலான் உள்ளிட்ட படங்களை தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தில் புதிய தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘ஆலம்பனா’. படத்தில் நடிகர் வைபவ் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு கதாநாயகியாக நடிகை பார்வதி நாயர் நடித்துள்ளார். நடிகர் முனிஸ்காந்த் பூதமாக நடித்துள்ளார். அலாவுதீனும் அற்புத விளக்கும் கான்செப்ட்டை மைய்யமாக வைத்து தயாராகியுள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா. 
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வரவுள்ளது. 

ஜெய், ப்ரேம்ஜி இல்லாமல் சீனியர் நடிகர்களுடன் இணைந்தது மகிழ்ச்சி - வைபவ் 

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வைபவ், எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி மிகவும் அருமையாக இசை அமைத்திருப்பதாக தெரிவித்தார். 

Share this story