ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் "ஹேப்பி ராஜ்" -திரைப்பட விமர்சனம்

karthi with gv

ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் ஜி.வி., அதே கம்பெனியின் லீடர் ஸ்ரீகவுரி பிரியாவை சந்திக்கிறார். அப்பாஸ் கோடீஸ்வரர். ஜி.வியுடனான தனது மகள் ஸ்ரீகவுரி பிரியாவின் காதலை அங்கீகரித்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யும்போது, ஜி.வியின் பெற்றோரை பார்த்து, தனது அந்தஸ்துக்கு அவர்கள் சரிப்பட்டு வருவார்களா என்று யோசிக்கிறார். இதனால், ஸ்ரீகவுரி பிரியாவின் திருமணம் தடைபடுகிறது. பிறகு என்ன நடக்கிறது என்பது, நல்ல மெசேஜுடனான கிளைமாக்ஸ்.

பிரதீப் ரங்கநாதனின் உதவியாளர் மரியா ராஜா இளஞ்செழியன் எழுதி இயக்கியுள்ளார். முழுநீள நான்-ஸ்டாப் காமெடி படத்தில் நல்ல கதையையும், இளைய தலைமுறைக்கு தேவையான ெமசேஜையும் சொல்லியிருக்கிறார். ஹேப்பி என்றுதான் பெயரே தவிர, படம் முழுக்க பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறார் ஜி.வி. அவரது எனர்ஜியான நடிப்பும், நடனமும் படத்தை தாங்கி நிற்கிறது. ஸ்ரீகவுரி பிரியாவுக்கும், அவருக்குமான லவ் கெமிஸ்ட்ரி சூப்பர். இன்னொரு ஹீரோ, ஜார்ஜ் மரியன். குணச்சித்திர நடிப்பில் உயர்ந்து நிற்கிறார். கீதா கைலாசம், பிராத்தனா நாதன், அப்பாஸ் நடிப்பு சிறப்பு.

மதுரை முத்து, அதிர்ச்சி அருண், சோஃபா பாய் ரசூல் ஆகியோரும் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஜாலியான கதைக்கு வண்ணமயமாக ஒளிப்பதிவு செய்துள்ளார், மதன் கிறிஸ்டோபர். ஃபீல்குட் படத்துக்கான பாடல்களையும், பின்னணி இசையையும் ஜஸ்டின் பிரபாகரன் சிறப்பாக வழங்கியுள்ளார். 

Share this story