விஷால் படத்தை தொடங்கும் ஹரி.. ஷூட்டிங் எப்போது தெரியுமா ?

vishal 34

 விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

 ‘தாமிரபரணி’ படத்தின் வெற்றிக்கு பிறகு 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ளது விஷால் - ஹரி கூட்டணி. எப்போதும் ஆக்ஷன் அதிரடி படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வரும் ஹரி, இந்த படத்தையும் அதே பாணியில் இயக்கவிருந்தார். அதனால் விரைவில் ரசிகர்களுக்கு விரைவில் ஒரு ஆக்ஷன் விருந்து காத்திருக்கிறது. 

vishal 34

விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

vishal 34

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்திற்கான ப்ரோமோ ஷூட் நாளை நடைபெற உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஷூட் முடிந்து வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் முழு ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story