ஹரி பாஸ்கர் - லாஸ்லியா நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் படத்தின் டீசர் ரிலீஸ்..!
1728730846000

ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலின் மூலம் தனது ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் ஹரி பாஸ்கர். அடுத்ததாக படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இவர் நடித்துள்ள படத்திற்கு மிஸ்டர் ஹவுஸ் கீபிங் என தலைப்பிட்டுள்ளனர். இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு கதாநாயகியாக லாஸ்லியா நடித்துள்ளார். இப்படத்தை அருண் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஹரி பாஸ்கர் , வீட்டில் ஐடி-யில் வேலை செய்கிரேன் என வீட்டிற்கு தெரியாமல் சென்னையில் வந்து லாஸ்லியா வீட்டில் வீட்டு பணி செய்யும் நபராகவுள்ளார். லாச்லியாவிடம் காதல் கொள்கிறார். ஆனால் லாஸ்லியா பல நபர்களை டேட் செய்து வருகிறார் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவை குலோதுங்கவர்மன் , இசையை ஓஷோ வெங்கட் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.