நடிகராக அசத்தும் கிரிக்கெட் வீரர் ‘ஹரி ஷங்கர்’.

photo

ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்த புதுமுக கிரிக்கெட் வீரர் ஹரி ஷங்கர் தற்போது நடிகராக அசத்தி வருகிறார்.

photo

அண்டர் 19 பிரிவில் ஜூனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடி புகழ் பெற்றவர் ஹரி ஷங்கர். இவர் ஐபிஎல் போட்டிகளில் அனலைசராக பணியாற்றியுள்ளார். இது தவிர ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக அனலைசராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் சின்னத்திரைமூலமாக நடிகராக அறுமுகமான ஹரி  விஜய் டிவியில் காற்றுக்கென்ன வேலி கலர்ஸ் டிவியில் அம்மன், மாங்கல்ய சபதம் உள்ளிட்ட தொடர்களில் நடித்தார். பின்னர் வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் டிரைவர் ஜமுனா, பட்டாம் பூச்சி, மாயத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

photo

இந்த நிலையில் அவரது சினிமா வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியது லேபில் சீரிஸ் தான். தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில்” விளையாட்டு துறையில் சரியான பக்க பலம் இல்லாததால் சினிமாவுக்கு வந்தேன் தற்போது லெபிள் சீரிஸில் நடித்தது எனக்கு நல்ல பிரபலத்தையும் புகழையும் பெற்று தந்துள்ளது என கூறியுள்ளார்.

Share this story