ஹரிஷ் கல்யாண் - இவானா நடிப்பில் ‘LGM’.. டிரெய்லரை வெளியிட்ட ‘தல’ தோனி !

lgm

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘LGM’ படத்தின் டிரெய்லரை தோனி வெளியிட்டுள்ளார். 

வித்தியாசமான கதைக்களத்தில் காதல் மற்றும் குடும்ப படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘LGM’. இந்த படத்தை பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, தனது மனைவியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.  ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்கி் வருகிறார்.

lgm

முதல்முறையாக நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரும் ஜூலை மாதம் இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

lgm

அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டிரெய்லரை பிரபல கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story