லப்பர் பந்து இயக்குநருக்கு தங்க செயின் பரிசளித்த ஹரிஷ் கல்யாண்
1728028813000
பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரிப்பில் வெளியான 'லப்பர் பந்து' படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையை கொண்டிருந்தது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்க, தினேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. லப்பர் பந்தை பார்த்த ரசிகர்கள் பலர், சமூக வலைதளங்களில் இந்தப் படத்திற்கு பாராட்டு தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவுக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் தங்க சங்கிலியை பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

