மாறுப்பட்ட தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண்.. ‘பார்க்கிங்’ மிரட்டலான ஃப்ர்ஸ்ட் லுக் !

parking

 ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

‘எல்ஜிஎம்‘ படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் பார்க்கிங். சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது. 

parking

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்து வருகிறார். இவர் மேயாத மேன், பிகில் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளையொட்டி இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இரண்டு மாறுப்பட்ட தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். இந்த போஸ்டர் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story