ஹரிஷ் கல்யாண் - 'அட்டக்கத்தி' தினேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்... டைட்டில் லுக் அறிவிப்பு !

LubberPandhu

 ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

LubberPandhu

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான அவர், பியார் பிரேமா காதல், தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து அடுத்தடுத்து புதிய படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.‌

LubberPandhu

அந்த வகையில் கிரிக்கெட் வீரர் தோனியின் நிறுவனம் தயாரிக்கும் 'எல்.ஜி.எம்' படத்தில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து 'அட்டக்கத்தி' தினேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். 'வதந்தி' வெப் தொடரில் நடித்த சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 

LubberPandhu

'நெஞ்சுக்கு நீதி' படத்தில் வசனம் எழுதிய தமிழரசன் பச்சமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.  இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு 'லப்பர் பந்து' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

Share this story