ஹரிஷ் கல்யாணின் நடிப்பில் ‘பார்க்கிங்’... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

parking

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘பார்க்கிங்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘எல்ஜிஎம்‘ படத்திற்கு பிறகு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பார்க்கிங்’. சஸ்பென்ஸ் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை சோல்ஜர்ஸ் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்து வருகிறது.  

parking

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இந்துஜா நடித்துள்ளார். இவர் மேயாத மேன், பிகில் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரன், பிராத்தனா நாதன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். 

சமீபத்தில் இப்படத்தின் மாறுப்பட்ட ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி டிரெய்லர் உள்ளிட்ட அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. 

Share this story