‘IS KIS KIFA’... ‘LGM’ அடுத்த லிரிக்கல் பாடல் வெளியீடு !
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ‘LGM’ படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது.
‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘LGM’. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா இணைந்த நடித்துள்ளனர்.
இவர்களுடன் இந்த படத்தில் நடிகை நதியா, காமெடி நடிகர் யோகிபாபு, ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. இதையொட்டி இப்படத்தின் அடுத்த பாடல் வெளியாகியுள்ளது. IsKisKifa என்று தொடங்கும் அந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு இயக்குனர் ரமேஷ் தமிழ் மணியே இசையமைத்து பாடியுள்ளார். நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் இந்த பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். இந்த பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
#LGM’s next single #IsKisKifa is out now!
— Vamsi Kaka (@vamsikaka) July 20, 2023
Tune in to listen to the song in #Kiliki language! https://t.co/4EiIjHQUwv#LGMOnSonyMusic@DhoniLtd @msdhoni @SaakshiSRawat @Ramesharchi @iamharishkalyan @i__ivana_ @ActressNadiya @iyogibabu @rjvijayofficial @vp_offl @Actor_Srinath… pic.twitter.com/rrds3DwX9c