‘எல்ஜிஎம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவு... கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் !

lgm

தோனி தயாரிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

lgm

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருப்பவர் ஹரிஷ் கல்யாண். ஓ மணப்பெண்ணே, தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு அவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘எல்ஜிஎம்’. இந்த படத்தில் நடிகை இவானா கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இணைந்து நடிகை நதியா மற்றும் காமெடி நடிகர் யோகிபாபு நடித்து வருகின்றனர். 

lgm

இந்த படத்தை ‘அதர்வா தி ஆரிஜின்’ என்ற கிராபிக்ஸ் நாவலை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இயக்கி் வருகிறார். பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

lgm

அம்மா மற்றும் வருங்கால மனைவி இடையே சிக்கி தவிக்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை மையமாக வைத்து உருவாகும் கதைக்களத்தை கொண்டது இந்த படம். இந்நிலையில் இப்படத்தின் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ளதாக தோனி தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. ‘எல்ஜிஎம்’ படப்பிடிப்பு நிறைவுபெற்றதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

Share this story