ஹரிஷ் கல்யாண் நடித்த டீசல் படத்தின் 2வது பாடல் அப்டேட்

'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களில் ஒருவராக ஹரிஷ் கல்யாண் உள்ளார். அடுத்ததாக அவரது 'டீசல்' படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். ஹரிஷ் கல்யாண் கரியரில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார்.
Indha moment ku, naa romba naala wait panren! Finally, it’s here & oru vera level surprise-um iruku! Revealing it tomorrow at 11.11am! Stay tuned ❤️🎵 #IdhuDhanWorthTheWaitMoment #Diesel@iamharishkalyan @AthulyaOfficial @shan_dir @devarajulu29 @ThirdEye_Films @thespcinemas… pic.twitter.com/EUzd3eC9Zc
— Harish Kalyan (@iamharishkalyan) February 15, 2025
சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. 'டீசல்' படத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி, வினய், சாய் குமார், அனன்யா, கருணாஸ், விவேக் பிரசன்னா, சச்சின் கேதேகர், ஜாகீர் உசேன், தங்கதுரை, கேபிஒய் தீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான பீர் சாங் வெளியாகி மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்று இணையத்தில் வைரலானது.இந்த நிலையில் படத்தின் இரண்டாம் பாடல் நாளை காலை 11.11 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.